காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 வயதுடைய நோயாளி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து அமர்க்களம் . இளைஞரின் இச்செயலால் ஆண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள் அச்சமடைந்து அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடிப்பு . இளைஞரின் செயலால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஆயிரமடி பகுதியை சேர்ந்தவர் 19 வயதான முனுசாமி (19) .இவர் அருகிலுள்ள கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இவர் தனது அம்மாவுடன் வசித்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக உணவு உட்கொள்ளாமல் பணிக்கு செல்லாமல் மன அழுத்தத்துடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் . இதனால் அவரது தாயார் முனிசாமி, பணிபுரியக்கூடிய தொழிற்சாலை நண்பர்கள் உதவியோடு வாலாஜாபாத் மருத்துவமனையிலேயே தனது மகனை அனுமதித்திருக்கிறார்.

இந்த நிலையில் அங்குள்ள ஆண்கள் பிரிவிலே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு , அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் , அரை நிர்வாண கோலத்தில் தீடிரென கத்தி சத்தம் போட்டு அங்கிருந்த பொருட்கள் சிலவற்றை தள்ளிவிட்டு உடைத்திருக்கிறார் . இதனால் அச்சமடைந்த சக நோயாளிகள் அப்பிரிவிலிருந்து வெளியேறி பதட்டத்துடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாக தரப்பில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவமனையின் பாதுகாவலர்கள் உதவியோடு அரை நிர்வாண கோலத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் போதைக்கு அடிமையாகி உள்ளாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா என்பதை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கத்தி கூச்சலிட்டு மருத்துவமனையிலிருந்த பொருட்கள் தள்ளிவிட்டு உடைத்தால் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையே சற்று பரபரப்புடன் காணப்பட்டது . மேலும் இச்சம்பவம் மருத்துவமனையில் பதட்ட சூழ்நிலையை உண்டாக்கியது.