உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை., போலீஸாருக்கு சந்தேகம்! போதையால் மரணமா?

3 Min Read
தாதகாப்பட்டி

மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா? அல்லது நோயினால் இறந்தாரா இல்லை முன்விரோத காரணமாக உயிரிழந்தாரா? என்பது குறித்து தெரியவரும்.

- Advertisement -
Ad imageAd image

சேலம் – தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் போதை ஊசி போட்டதால் உயிரிழந்து விட்டதாக புகார்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி வேலூர் புது தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் – செல்வி தம்பதியர். இவர்களது மகன் கிரி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இரவு கிரி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அந்த மாணவனின் உடல் மணியனூர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த மாணவன் போதை ஊசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்து விட்டதாக காவல் துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையாளர் அசோகன், காவல் ஆய்வாளர் சந்திரகலா, கொண்டலாம்பட்டி காவல் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர்
அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவனின் பெற்றோர் தங்களின் மகன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை மாணிக்கம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

இதனடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அடக்கம் செய்யப்பட்ட மாணவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை அடுத்து  உதவி ஆணையாளர்  அசோகன், காவல் ஆய்வாளர் சந்திரகலா, கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சுடுகாட்டுக்குச் சென்று  மாணவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா? அல்லது நோயினால் இறந்தாரா இல்லை முன்விரோத காரணமாக உயிரிழந்தாரா? என்பது குறித்து தெரியவரும்.

மாணவனுக்கு போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவன் கிரி மீது கஞ்சா  மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக உதவி ஆய்வாளர் அசோகன் தெரிவித்தார்.
சேலம் மாநகரில் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் மாணவர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது குறிப்பாக சீல நாயக்கன்பட்டி பகுதி முழுவதும் போதை மாத்திரை, ஊசி உள்ளிட்டவைகள் மருந்து கடைகளில் அதிக அளவில் விற்கப்படுகிறது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். +2 வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இறப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review