விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பரசுரட்டி பாளையம் கிராமத்தைச் சார்ந்த 13 வயது மாணவி ராம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர், ஆண் நண்பருடன் அருகே உள்ள கொங்கமேடு என்ற இடத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் நேற்று மாலை தனியாக பொழுது போகும் நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் இங்க என்ன தனியா பேசுறீங்க வாங்க காவல் நிலையத்துக்கு போகலாம் என்று அழைத்துள்ளார்.இருவரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் அந்த நபரிடம் கெஞ்சியுள்ளனர்.அவர் மறுத்து அதெல்லாம் முடியாது காவல் நிலையத்திற்குத்தான் போக வேண்டும் உங்கள் அப்பா அம்மா அங்கு வந்து சொல்லிவிட்டு உங்களை அழைத்து போகட்டம் என்று சொல்லியுள்ளார்.ஆனாலும் அதையெல்லாம் கேட்காத அவர்,இருவரையும் கூட்டி சென்று சிறு தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு(கரும்பு தோட்டம்) சென்று மிரட்டி அந்த மாணவனை கரும்பால் தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த நிலையில் அந்த மாணவி மறுக்க வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.அதன் பின்னர் மீண்டும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர்.இந்த நிலையில் அந்த மாணவன் அங்கு நடந்த உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக அழுது கொண்டே சென்ற மாணவி தன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலிஸ் விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய நபர் பரசுரெட்டிபாளையம் கிராமத்தைச் சார்ந்த மணி என்கிற மணிகண்டன் என்பதும், இவர் புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணி செய்து வரும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தனியார் பள்ளி ஓட்டுநரை தேடிச் சென்று கைது செய்துள்ளனர்.பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.