ஆளுநர் ஆர் என் ரவி திராவிட மாடல் ஆட்சி குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் , தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக அரசு முன்னிறுத்திய திராவிட மாடல் தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக முன்னோடி என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒரு பிரபல ஆங்கில நாளேடுக்கு (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா) அளித்திருந்த நேர்காணலில் தற்பொழுது ஆளும் திமுக அரசைபற்றியும் , திராவிட மாடல் ஆட்சி குறித்தும் கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
அதில் அவர் “திராவிட மாடல் என்று ஒன்று இல்லை, காலாவதியான கொள்கை திராவிட மாடல் , காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல்; ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல்.” என்று கருத்து தெரிவித்திருந்தார் . ஆளுநரின் இந்த கருத்து திமுக கட்சி நிர்வாகிகளை ஆத்திரம் அடைய செய்துள்ளது . அவருக்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ள சூழ்நிலையில் திமுக அரசின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார் இதில் ”திமுக அரசு முன்னெடுத்துள்ள நமது திராவிட மாடல் சாதனைத் திட்டங்களைப் தாங்கிக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திருப்பு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சி, நமது கொள்கைகள் மீது அவதூறு பரப்பும் வகையில் எந்தொரு ஆதாரம் இல்லாத விடீயோக்களை பரப்பி வருகின்றனர் . நமது திமுக கழகத்தைத் திட்டி தான் அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலையால் அவர்கள் உள்ளனர் .
தமிழ்நாட்டின் திராவிட மாடல் தான் இனி இந்திய நாட்டின் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக முன்னோடி என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. 10 ஆண்டுகால இருளை விரட்டிய இரண்டாண்டு கால விடியல் ஆட்சியின் வெற்றி தான் இது ” என அவர் தெரிவித்துள்ளார் .
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி தமிழ்நாட்டில் 1 ,222 இடங்களில் மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .