- சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் நான்கு பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அரண்மனை 4 படம் 2024ம் ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படமாக அமைந்ததோடு, முந்தைய மூன்று பாகங்களின் சாயல் இல்லாமல் மாறுபட்ட ஹாரர் கதையில் உருவாகி இருந்தது. தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இதில் அரண்மனை ”முதல் பாகம்” 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி திகில் – மசாலா திரைப்படம் சுந்தர் சி எழுதி இயக்கியது . இப்படத்தில் சுந்தருடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி , வினய் ராய் , ஆண்ட்ரியா ஜெர்மியா , ராய் லட்சுமி , சந்தானம் , கோவை சரளா , மனோபாலா , சித்ரா லட்சுமணன் மற்றும் நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . இந்த படம் அரண்மனை திரைப்பட வரிசையில் முதல் பாகமாகும்.
அரண்மனை ”இரண்டாம் பாகம்” 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்தில் சுந்தர் சி., சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, திரிசா, சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது, 2014 ஆவது ஆண்டில் வெளியான அரண்மனை திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இத்திரைப்படம் 2016 ஜனவரி 29 அன்று வெளியானது.
அரண்மனை ”மூன்றாம் பாகம்” சுந்தர் சி. இயக்கத்தில் 2021இல் வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திகில் திரைப்படமாகும்.இந்த படத்தில் சுந்தர் சி., ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்ஷி அகர்வால், விவேக் (அவரது மரணத்திற்குப் பின் வெளியாகும் படம்), மைனா நந்தினி, யோகி பாபு, நளினி, மனோபாலா, சம்பத் ராஜ், ஓவி பண்டர்கர், வின்சென்ட் அசோகன் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.
படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இது அரண்மனை திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாகும். அவினி சினிமேக்ஸ் பதாகையின் கீழ் குஷ்பூ இப்படத்தை தயாரித்துள்ளார். யூ. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவையும், சி. சத்யா இசையமைப்பையும், பென்னி ஆலிவர் படத் தொகுப்பையும் மேற்கொண்டனர். படம் 14 அக்டோபர் 2021 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது.
அரண்மனை ”நான்காம் பாகம்” சுந்தர் சி இயகத்தில் 2024இல் தமிழ் மொழியில் வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இப்படத்தின் கதையை வெங்கட் ராகவன் மற்றும் எஸ். பி. ராமதாஸ் ஆகியோருடன் சுந்தர் சி எழுதியிருந்தார். குஷ்பு சுந்தரின் அவினி சினிமேக்ஸ் மற்றும் ஏ. சி. எஸ். அருண் குமாரின் பென்ஸ் மீடியா (பி. எல். எல். லிமிடெட்) தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தமன்னா பாட்டியா, ராசி கன்னா, ராமச்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஒரு பகுதி தெலுங்கில் பாக் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடித்த காட்சிகளுக்கு பதிலாக வெண்ணிலா கிசோர் மற்றும் சீனிவாச ரெட்டி நடித்தனர். இது அரண்மனை திரைப்படத் தொடரின் நான்காவது பாகமாகும். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார், இ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவையும் பென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் மேற்கொண்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/army-soldier-on-vacation-dies-in-a-two-wheeler-accident/
இந்த நிலையில் அடுத்தபடியாக அரண்மனை 5வது பாகத்தையும் மாறுபட்ட ஹாரர் காமெடி கதையில் இயக்க தயாராகி வரும் சுந்தர். சி இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்குப் வரப்போகிறது.