9 ஆண்டில் என்ன சாதனைகள் செய்தார்கள் என பட்டியலிட அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா?ஸ்டாலின் பேச்சு

3 Min Read
ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய அரசு செய்த சாதனை பட்டியலை வெளியிடுவாரா? என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. .க.ஸ்டாலின் பங்கேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்

கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசும் போது, ’இந்த நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்லப்போனால் தெம்போடு இருமாப்போடு நான் உங்கள் முன் நின்றுகொண்டு உள்ளேன். பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். கழகத்திற்கு தொண்டனுக்கு தொண்டனாக இருந்து செயல் வீரர்களுக்கு செயல் வீரராக இருந்து பணியாற்றி வருகிறேன் என்றார்.

நமது வழிகாட்டி அண்ணாதுரை தீர்மானம் இந்த சேலம் மாவட்டத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழகத்திலிருந்து திமுக இயக்கத்தை பேரறிஞர் அண்ணா இங்கு கொண்டு வந்தார். கருணாநிதியும் இங்கிருந்துதான் வசனத்தை எழுதி இருந்தார். எனது வாழ்வில் மறக்க முடியாத ஊர் சேலம். சேலத்தில் மூன்று நாள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் எனக்கு பெருமை தேடித் தந்தவர் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம்.

ஸ்டாலின்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற தயாராகும் கூட்டம் தான் இந்த கூட்டம். சேலமும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதனால்தான் நேரு சேலத்தில் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். சேலத்தில் பெருவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நீங்கள் உழைத்திட வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழகத்தின் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி தான் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம். தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமித்திருக்கிறோம். பூத் கமிட்டி அமைக்கும் பணியும் முடித்திருக்கிறோம். இது சாதாரண பணி இல்லை. இந்திய அளவில் அல்ல. உலகம் முழுவதும் இது போன்ற கட்சி பணியாற்றும் கட்சி வேறு கட்சி இல்லை.

மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு பக்கம் கட்சியின் வளர்ச்சி மற்றும்  மாநிலத்தின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் இரண்டு கண்களாக கருதி செயல்பட வேண்டும் என்றார்.

இன்று தமிழ்நாட்டிற்கு பாஜக மூத்த தலைவர் அமித்ஷா வந்துள்ளார். இதன் மூலம்  நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் தயாராகி வருவது தெரிகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டு செய்த திட்டங்கள் பற்றிய பட்டியலை அமித்ஷா வெளியிடுவாரா?  11 விழுக்காடு திட்டங்களை தமிழகத்திற்கு நாங்கள் கொண்டு வந்தோம். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கினோம். நெடுஞ்சாலை துறை மூலமாக பல திட்ட பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றி அகல ரெயில் பாதையாக மாற்றினோம். கடல் சார் பல்கலைக்கழகம்கொண்டு வந்தோம். உயர் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வந்தோம். இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்தோம் என மத்திய அரசு கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

காங்கிரசில் திமுக கூட்டணி இருந்த போது இது போன்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். மத்திய அரசு கொண்டு வந்தது என்ன?ஹிந்தி திணிப்பு , சமஸ்கிருதம் திணிப்பு, மாநிலத்திற்கு தரவேண்டிய நிதியைக் கூட தரவில்லை.

செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கழக அரசின் சாதனைகளை அனைவரும் முழுதாக தெரிந்திருக்க வேண்டும்.சமூக வலைதளங்களில் நீங்கள் உடனே கணக்கை தொடங்க வேண்டும். இதன் மூலம் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புகிறார்கள்.வெற்றி நமதே என்று பேசினார்.

Share This Article
Leave a review