தமிழைத் தேடி இயக்கப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டு வரும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு நாம் மேற்கொண்ட தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணம் ஆக்கப்பூர்வ தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல் எண்ணற்ற இடங்களில் தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை சூட்டிங் மகிழ்வோம். நல்ல தமிழ் பெயர்களாகிய பதாகைகள் அமைக்கப்பட்டு இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பணிகள் இன்னும் விரிவு படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தமிழன்னைக்கு தொண்டு செய்வதன் மூலம் என்னை மகிழ்ச்சி படுத்துங்கள். தமிழைத் தேடி இயக்கத்தின் பணிகள் பயனளிக்க தொடங்கியுள்ளன அதை நினைத்து இளைப்பாராமல் தொடர்ந்து அதே வேகத்தில் தமிழ் பணிகளை செய்வோம். என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.