கோவை மாவட்டத்தில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் என்பவர், இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துறை பாதுகாப்பு பணி. இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டத்தில் தமிழக பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் ஆகிய இடங்களில் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் மாலை வரை, அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு, மனை போன்ற இடங்கள் மற்றும் பொறியியல் கல்லூரி போன்ற அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் இடையே அமைந்துள்ள சாலையில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு உள்ளது. திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் என்பவர்,அவருடைய இல்லத்தில் நுழைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று கார்களில் வந்த அதிகாரிகள் தற்போது திடிரென்று சோதனை ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் என்பவருடைய இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் என்பவர், அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் எனப்படும் நிலையில், இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.