திமுக பிரமுகரை ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி…

0
68
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இளையராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் என்பவரின்  மகன் தியாக, இளையராஜா இவர் தற்போது திமுகவில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்  மணவாள நல்லூர் கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யும் போது அதே ஊரை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் காரணமாக  இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து இரண்டு கை துப்பாக்கி   மூலம் சுட முயற்சி செய்யும்போது காரில் தப்பிக்க முயன்ற இளையராஜாவை மடக்கி அந்த கும்பல் சுட்டதில்  இடுப்பு , கழுத்து உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி பீம்ஸ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் ஆறு பேர் கொண்ட கும்பல் யார்?   பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்த ரகத்தைச் சார்ந்தது ? அது எப்படி இவர்கள் கையில் வந்தது? இது குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை செய்து வருகிறார். வழக்கு சம்பந்தமாக  இருவரை பிடித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here