ஏழை மக்களுக்கு உதவிடும் திட்டத்தில் ஊழல் செய்த கட்சி திமுக – விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

2 Min Read
மனிதம் காப்போம் மாநாடு

விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மனிதம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்.

- Advertisement -
Ad imageAd image

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முன்னோட்டமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதிமுக தலைமையில் பல கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு வரவுள்ளன. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. திமுக கூட்டணி சுயநலவாதிகளுக்கான கூட்டணி ஆகும் அதிமுக பொது நலனை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்துள்ளது. எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் தான் வாரிசு ஆனால் திமுகவில் வாரிசு அரசியலை மக்கள் அறிவார்கள்.

எடப்பாடி

72 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தினை செயல்படுத்தினார் எம்ஜிஆர். கல்வி கற்கும் முக்கியத்துவத்தை அறிந்தவர் ஜெயலலிதா அதனால்தான் விலையில்லா புத்தகம், சைக்கிள்கள்,மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் கொடுத்தது அதிமுக அரசு. 520 திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்ட திமுக ஒன்று இரண்டு திட்டங்களை நிறைவேற்றிவிட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது போல நாடகமாடுகிறார்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்வது உறுதி அதற்கு இந்த மாநாடே சாட்சி என்று பேசினார்.

மேடை

மாநாட்டில் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவும் தென் மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழை வெள்ளத்திலும் மக்கள் தவிர்க்கிறார்கள். ஆனால் திமுக அரசு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே உணவு நிதி வழங்கி வருகிறது. திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததால் தவறு செய்து விட்டதாக மக்கள் உணருகிறார்கள். ஸ்டாலின் ஆட்சி இதுவரை விடியல் கொடுக்கவில்லை காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம், நீட் என நீண்டு கொண்டே போகிறது வாக்குறுதிகள். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக செயல்படுகிறார் சென்னையில் 4000 கோடி வடிகால் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது என தெரிவித்து பின்னரும் கூட வெள்ளநீர் சூழ்ந்து இருப்பது எதனால் திமுகவில் ஜனநாயகம் இல்லை திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி சண்டைகள் சாராய சாவுகள் அதிகரிக்கும் திமுக ஆட்சியில் தான் தண்ணீரில் மனித மலம் கலக்கும் நிகழ்வு நடந்தேறி உள்ளது என பேசினார்.

தொண்டர்கள்

புரட்சி பாரதம் கட்சி நடத்திய மனிதம் காப்போம் மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தார்கள்.விழுப்புரம் மாவட்ட காவல் துறை போதுமான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Share This Article
Leave a review