தமிழகத்தில் ‘திராவிட முன்னேற்ற கட்சி’ ,ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் முடித்து இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது .
2011 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக விடம் தோல்வி அடைந்த திமுக கட்சி , 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முக ஸ்டாலின் தலைமையில் தனி பெரும்பான்மையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது திமுக கட்சி .
இரண்டு ஆண்டுகள் முடிவுறும் நிலையில் நேற்று (சனிக்கிழமை) திமுக அரசின் இரண்டு ஆண்டுகால சாதனை கண்காட்சியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
இதனை தொடர்ந்து இன்று மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

தமிழக மக்கள் திமுக அரசுக்கு இரண்டு ஆண்டுகளாக கொடுத்த ஒத்துழைப்பை போலவே மூன்றாம் ஆண்டிலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நான் சொன்னது போலவே திமுக கட்சிக்கு ஓட்டு அளித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட அரசுக்கு ஓட்டு போடவில்லையே என்று வருந்தும் சூழ்நிலை தான் திமுக ஆட்சியில் தற்பொழுது நடந்துள்ளது இது இறுதி வரை தொடரும் என கூறினார் .
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.
தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.
திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்!” என்று கட்சி உடன் பிறப்புகளுக்கும் , பொது மக்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார் .