பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பக்கிரிசாமியை திமுகவை விட்டு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.அதற்க்கு பதிலலைத்த முதல்வர் ஸ்டாலின் பாலியல் தொந்தரவு செய்த பக்கிரிசாமி மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் அவரை உடனடியாக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. என பதிலலைத்தார்

இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேல் சிகிச்சைக்காக அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பக்கிரிசாமி திமுகவை விட்டு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்