விழுப்புரம் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக திமுக மாவட்ட கவுன்சிலர் கைது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு கானை போலீசார் நடவடிக்கை. விழுப்புரம் அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிராம நிர்வாக பெண் அலுவலரை தாக்கியதாக திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி கைது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
விழுப்புரம் அருகே ஆயந்தூர். மற்றும் ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தி இவர் அதே பகுதியில் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் பணியாளர்களுக்கு உணவு வாங்குவதற்காக இரவு அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அதே பகுதியில் உணவு வாங்குவதற்காக முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் வந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஏற்கனவே தான் ஆர்டர் செய்த உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு ஆயந்தூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி நான் ஆர்டர் செய்த உணவை எப்படி நீ வாங்கலாம் என்று கெட்டு பெண் கிராம நிர்வாக அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் அதிகரித்தது அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலரை திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற செய்தனர். இதனைத் தொடர்ந்து கானை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்தனர் இன்று அதிகாலை முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.