நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக காங்கிரஸ் அரசுதான். தடுக்க நினைத்தது அதிமுக விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாக்யராஜை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பரப்புரி மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜக ஆளுகிற மாநிலங்களுக்கு அதிக சலுகைகளை கொடுத்து நிதி ஒதுக்குகிறது இது போன்ற செயல்களில் காங்கிரஸ் வேறு பாஜக வேறு கிடையாது.ஜிஎஸ்டி வரி அதிகம் வசூலிப்பதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால் ஜிஎஸ்டி மூலம் வருவாய் தமிழகத்திற்கு கிடைப்பது இல்லை.திமுக மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்ததில் திட்டங்கள் ஒன்றும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் நான்கு முதல்வர் ஒருவர் ஸ்டாலின் மற்றொருவர் உதயநிதி மற்றொருவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அடுத்ததாக ஸ்டாலின் மனைவி துர்கா அதிகார மையங்களாக செயல்படுகின்றனர்.

திமுக ஊழல் ஆட்சி விலைவாசி உயர்வு ஏற்படுத்திய ஒரு ஆட்சி மளிகை விலை பொருட்கள் கட்டுமான பொருட்கள் என விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது திமுக ஒரு கட்சியே அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகிறது திமுக எப்படியாவது அதிமுகவை முடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஜனநாயகம் உள்ள கட்சி அதிமுக அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் வீதிக்கு வந்து விடுவார்கள். தமிழகத்தில் கஞ்சா போதைப் பொருட்கள் அதிகமாகி விட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் திமுக கட்சி நிர்வாகி வீட்டில் 5 கோடி ரூபாய்க்கு கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குடித்துவிட்டு இறந்து போகிறவர்களுக்கு 10 லட்சம் நிதி வழங்குகிற கட்சியாக திமுக விளங்குகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டம் இயற்றியவர்கள் அதிமுகவினர்.சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்காதவர்கள் பாஜக வினர். சாதிவாரி கணக்கு எடுக்கக் கூடாது என்பவர்களோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது நடைபெறுகின்ற தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் இரட்டை இலை சின்னத்தில் முத்தரையிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.