விழுப்புரத்தில் கூலித் தொழிலாளியை தாக்கிய திமுக நகர செயலாளர் மகன். மண்டை உடைந்து தையில் போட்ட நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு. தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபடும் நகர செயலாளர் மகன் தமிழ். விழுப்புரத்தில் இருசக்கர வாகனத்தில் முன்னாள் சென்ற கூலி தொழிலாளி வழி விடு என்று கூறி தூக்கி சென்று கடுமையாக அடித்துக் கொலை வெறி தாக்குதல் செய்த விழுப்புரம் திமுக நகர செயலாளர் மகனும் நகரமன்ற தலைவரின் தம்பிமான தமிழ் மீது விழுப்புரம் நகர காவல் துறை இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு.

விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஜி வயது 36 இவர் விழுப்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் சென்ட்ரிங் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஆவார். இவர் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது காந்தி சிலை அருகே போக்குவரத்து நெரிசலில் மெதுவாக சென்றுள்ளார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்தப்பட்டு வந்த விழுப்புரம் திமுக நகர செயலாளர் சக்கரை அவரின் மகனும் விழுப்புரம் நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வியின் உடன் பிறந்த தம்பியுமான தமிழ் என்பவர் ஹாரன் அடித்து வழி விட மாட்டியா என்று கூறி அந்த கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கி அங்கிருந்து தூக்கிச் சென்று விழுப்புரம் நகரத்தில் உள்ள வி,ஏ,ஒ அலுவலகம் பின்புறம் பகுதியில் நண்பர்களை வரவழித்து தலையில் தடியால் கடுமையாக தாக்கி மண்டையை உடைத்து உள்ளார்.

இதில் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயம் அடைந்த ராஜேந்திரஜி மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராஜேந்திரஜி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக நகர செயலாளரின் மகனின் அட்டூழிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவர் விழுப்புரத்தில் அராஜகத்தை ஈடுபட்டு வருகிறார் இவர் மீது ஏற்கனவே இதுபோன்ற வன்முறையில் ஈடுப்பட்டு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.