மாறி மாறி தாக்கிக் கொண்ட திமுக மற்றும் பாஜக., மருத்துவமனையில் அனுமதி.!

0
54
தமிழக முதல்வர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியில் திமுக நகரமன்ற துணைத் தலைவர், பாஜக ஓபிசி நகர செயலாளர் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாறி மாறி தாக்கிக் கொண்ட திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் பாஜகவினர் மாறி மாறி தாக்கிக் கொண்டு காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் அதே பகுதியில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான படிவங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்பகுதியில் திமுக கவுன்சிலரும் நகர் மன்ற துணைத் தலைவருமான செல்வமணி படிவம் விநியோகிக்கும் பணிகளை துவக்கி வைத்துக் கொண்டிருந்தார். படிவம் கொடுத்து விபரங்களை பொதுமக்களிடம் தெரிவிக்க அப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ஒலிபெருக்கியை நகரமன்ற துணைத் தலைவர் செல்வமணி நிறுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு நேற்று இரவு பிஜேபி கட்சியின் ஓபிசி நகரச் செயலாளர் சிவப்பிரகாசம் தாமரை படம் பொறிக்கப்பட்ட எல்இடி கட்டவுட்டை தெருவில் வைத்ததால் லைட்டை அணைக்க சொல்லி திமுகவின் செல்வமணி மற்றும் அவரது கோஷ்டியினர் பிரச்சனை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி சிவப்பிரகாசம் அவரது இளைஞர்களுக்கும் திமுக நகர துணை சேர்மன் செல்வமணிக்கும் இடையே வாக்குவாதம் இன்று ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இரு கட்சியினர் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே மாறி மாறி காக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி:

இதில் சிவப்பிரகாசம், செல்வமணி காயம் அடைந்ததால் அங்கிருந்த சிலர் சிவப்பிரகாசத்தையும், செல்வமணியையும் சம்பவ இடத்திலிருந்து மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இவருக்கும் இசிஜி எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான பிரச்சனை குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்
காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாஜக திமுக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இரு கட்சியினரும் அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here