செந்தில் பாலாஜி கைது,ஆளுநர் கடிதம் என தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் வருகின்ற 5 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேடடுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும், அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு – ஆளுநர் மோதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.