- தஞ்சாவூரில் நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி பண்டிகை அனைவராலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது, தமிழ்நாட்டில் இவ்விழா நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது, இதனையடுத்து கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற்சங்கம், அரண்மனை வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், இக்கண்காட்சியில் அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், காமாட்சி தங்கரதம் செட், குபேரன் செட், கிரிவலம் செட், கருடசேவை, நவ துர்க்கை, கிருஷ்ணர் விளையாட்டு போன்ற கொலு பொம்மைகளும், ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பொம்மைகளும் இக்கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன, இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% முதல் 20% சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது, இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பொம்மைகளை வாங்கிச் சென்றனர்