நடப்பு கல்வி ஆண்டில் சிறந்த நிலையை அடைய 10,11,12 ம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி.

2 Min Read
மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுடனான கூட்டம்

விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் தெரித்ததாவது, அரசு, நகராட்சி,ஆதிதிராவிடர் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image

இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள்,பேருந்து பயண அட்டைகள்,இலவச சீருடைகள் போன்றவை வழங்கி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் சுற்றுசுவர்கள் போன்றவற்றை அகற்றிட வேண்டும்.

அடுத்து வருவது மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் உள்ள மின் சாதனங்களை பராமரித்திடவும் உறுதித்தன்மையற்ற மரங்கள் மற்றும் கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் அதிகபடியான ஏழை,எளிய மாணவர்களே கல்வி படித்து வருகிறார்கள்.இம்மாணவர்களை நல்ல மதிப்பெண் பெற்று உயர்ந்த நிலையை அடைய செய்வது அசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் மிகப்பெரிய கடமையாகும்.

மாவட்ட ஆட்சியர் பழனி

ஒவ்வொரு துறையிலும் உயர்ந்த நிலையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களாகவே உள்ளனர்.10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை,மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்திட வேண்டும்.வாரந்தோறும் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறனை தொடர்ந்து ஆய்வு செய்திட வேண்டும்.கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியின் மூலம் கற்றல் திறன் மேம்படுத்திட வேண்டும்.தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்து அரசு பொதுதேர்வுகளில் 100 சதவீதம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.பள்ளி இடைநிற்றல் அதிக அளவில் காணப்படுகிறது.

குறிப்பாக பொதுத்தேர்வுகளில் தோல்வியுற்றவர்கள் ,தோல்வியுற்ற பாடங்களில் தேர்ச்சிபெறாமல் தொடர் ந்து கல்வி படிக்காத நிலை ஏற்ப்பட்டுள்ளது.இதனை ஆசிரியர்கள் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அப்பாடப்பிரிவில் தேர்ச்சி பெருவதற்கான வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ,11ம் வகுப்பு தொடர்ந்து படிப்பதற்கான வழிக்காட்டுதல்களை வழங்கிட வேண்டும்.அரசு பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் சிறந்த நிலையை அடைவதற்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பனிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டுமென கூறினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ்,கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review