திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துறை அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம் , திண்டுக்கல் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இன்று தொழிற்சாலையில் பணியில் இருந்த பணியாளர்கள் தோல் பதனிடும் தொட்டியை திறந்து சுத்தம் செய்து உள்ளனர்,

அப்போது சல்பைட் என்ற அமில விஷவாயு தாக்கியதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஹாசன், சுமன்ஹிம்ராம் மற்றும் விருதுநகரை சேர்ந்த வெங்கட்ராமன் உட்பட 3 பேர் மயக்கம் அடைந்தனர்,

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.