நடைப்பயணத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.,எதிர்பார்த்த கூட்டம் இல்லை.!

0
52
அண்ணாமலை

சென்னை: அண்ணாமலை நடைப்பயணத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எதிர்பார்த்த கூட்டம் இல்லை. போற வழியில் எல்லாம் அவருக்கு கூட்டம் இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். பாஜகவை தமிழ்நாட்டில் வளர வைப்பதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

பெரும்பாலும் கேரவனில் பயணம் செய்யும் இவர் ராமநாதபுரம் – சென்னை வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணம் தற்போது சிவகங்கை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் 7வது நாள் ஆகும் இன்று. இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயணம் குறித்து மூத்த
பத்திரிகையாளர் ப்ரியன் விமர்சனம் வைத்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அண்ணாமலையின் நடைபயணத்தின் ஆரம்பம் பிரமாதமாக இருந்தது.

அதுதான் உண்மை. ஆனால் அதன்பின் மோசமாகிவிட்டது. நடைப் பயணத்தில் எதுவும் பிரமாதம் இல்லை. தினமும் அரை கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர்தான் நடக்கிறார். அதை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் எதோ சில தொகுதிகளுக்கு செல்வது போலத்தான் இருக்கிறது. மற்றபடி அந்த நடைப்பயணத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எதிர்பார்த்த கூட்டம் இல்லை. போற வழியில் எல்லாம் அவருக்கு கூட்டம் இல்லை.

அண்ணாமலை பத்திரிகையாளர் ப்ரியன்

முதல்நாள் அவரின் நடைப்பயணத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு அதன்பின் இல்லை. முதல்நாள் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது அப்படியே குறைந்துவிட்டது. மக்களின் எழுச்சி இல்லை. அவர் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அது சக்ஸஸ் ஆகுமா என்று தெரியவில்லை. அவர் கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் அதில் ஆர்வம் இருக்க வேண்டும், நடைபயணம் என்றால் நடக்க வேண்டும். தமிழ்நாடு முழுக்க நடக்க வேண்டும் . அதுதான் நடைபயணம். ஒரு சில இடங்களில் நடப்பேன். பின்னர் கேரவனில் செல்வேன் என்று இருக்கிறார்.

இதை நடைபயணமாக கருத முடியாது. குமரி ஆனந்தன், வைகோ போன்றவர்கள் எல்லாம் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். அது போல செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாதையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். அண்ணாமலையோ அதை செய்யவில்லை. அவர் பயணம் வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடங்களில் உள்ள பாஜகவினருக்கு உற்சாகம் கொடுக்கும். ஆனால் மக்களுக்கு பெரிய மாற்றத்தை தராது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பயணம்:

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார். அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது. பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும். நடைபயணம்: பொதுவாக அரசியல்வாதிகளின் நடைப்பயணம் என்றாலே, காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி, காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர்.

பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகிறாராம். 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். மாலை மீண்டும் கொஞ்ச நேரம் நடக்கிறார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here