ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷின் 51 ஆவது படம்

2 Min Read
தனுஷ்

தமிழ் திரைத்துரையில் தனுஷிக்கு என தனி இடம் உண்டு.தனுஷ் நடிக்கவிருக்கும் அவரது 51ஆவது படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என்ற தனுஷி ஆசை நிராசை ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

- Advertisement -
Ad imageAd image
51 வது படம்

கேப்டன் மில்லர் ரிலீஸ்

தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகிவருவதால் நிச்சயம் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி கவனம் ஈர்க்கும் என்று தனுஷும், அவரது ரசிகரக்ளும் எதிர்பார்த்திருக்கின்றனர். படமானது டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் 50: இந்தச் சூழலில் சமீபத்தில் தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் தெரியவந்தது. அதன்படி படத்தை அவரே இயக்கவிருக்கிறார்.

வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்துக்கு ராயன் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படம் பலத்த வரவேற்பைப் பெற்றதால் நிச்சயம் இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இளையராஜா பயோபிக்கில் தனுஷ்.. இயக்குநர் யார் தெரியுமா?.. பிரம்மாண்ட படம் ரெடியாகுதாம்!

ரஜினி

தனுஷ் 51 கதை இதுவா?

இதற்கிடையே தனுஷ் தனது 51ஆவது படத்தில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க நாகார்ஜுனா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கும், ஹிந்தியில் உருவாகவிருக்கிறதாம். ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கருதப்படும் சூழலில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது அரசியல் ஜானரில் தயாராகிறதாம். இதற்கு முன்னர் தனுஷ் முழு அரசியல் படத்தில் நடித்ததில்லை. புதுப்பேட்டையில் சில நேரம் மட்டுமே அரசியல்வாதியாக வருவார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அரசியல் சாயத்தோடுதான் வருவார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட தனுஷ் ரசிகர்கள் கண்டிப்பாக இதில் புதிய தனுஷை பார்க்கலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

தமிழ் திரைத்துறையில் தனுஷின் ரசிகர்களுக்கென தனி இடம் உண்டு.இளைஞர்கள் மத்தியில் இந்த படம் பரவலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review