கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அம்மாவாசை ஆடி 18 போன்ற நாட்களில் முன்னோர்களை நினைவாக திதி நடக்கும் வழக்கம் போல இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து கொடுக்கவில்லை இதனால் பொதுமக்கள் திதி கொடுக்க முடியாமல் அவதி உற்றனர்.
மக்கள் பேசுகையில்:
அறநிலையத்துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தராதது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் மேலும் திதி கொடுத்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் கால் வைத்து நடக்க முடியாமல் சுற்றுப்புற சுகாதார கேடு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது என தெரிவித்தனர்
இந்த சூழலை சரியான முறையில் கையாளாக தெரியாத இந்து சமய அறநிலைத்துறை தங்களது கோபத்தை பொதுமக்கள் காட்டினர் மேலும் மனதளவில் திதி கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வந்தவர்களுக்கு ஏமாற்றம் மிகுதியால் அடைந்ததை நினைத்து திரும்பி சென்றனர்.