குழந்தைகளுக்கான சிறப்பு உறியடி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
பகவான் கண்ணனின் பிறந்த நாள் விழா கோகுலாஷ்டமி விழாவாக உலகெமெங்கும் வாழும் இந்து மத நம்பிக்கையாளர்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
இதனையடுத்து தஞ்சாவூரில் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக காலை முதல் நடைபெற்ற வருகிறது.
முன்னதாக சுவாமிக்கு திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணனை வழிபட்டனர்,
மாலையில் தேரடி வளாகத்தில் புகழ் பெற்ற 23ஆம் ஆண்டு உரியடி நிகழ்ச்சி, வழுக்கு மரம் ஏறுதல் சுவாமி புறப்பாடு,சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இதில் குழந்தைகளுக்கான சிறப்பு உறியடி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சையில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் வழுக்கு மரம் ஏறுதல் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி மரத்தின் உச்சியில் இருந்த பொருட்களை எடுத்து அசத்தினார்கள்.
தஞ்சை மேலவீதியில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 24ம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் திருவிழா நடைப்பெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ கண்ணன் நான்கு ராஜவீதிகளில் திருவீதி உலா சென்று, கோவிலை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு. இதற்கு முன்பாக உறியடி வழுக்கு மரம ஏறுதல் நிகழ்வு நடைப்பெற்றது. எண்ணெய் தடவப்பட்ட 40 அடி உயரம் வழுக்கு மரத்தில் இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து ஏறினார்கள்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/did-minister-duraimurugan-call-rajinikanth-and-express-his-regret/
அவர்கள் மீது நாலாபுறமும் தண்ணீர் வீசப்பட்டது. இதில் பல இளைஞர்கள் போட்டி போட்டு ஏற முற்பட்டும் ஏற முடியாத நிலையில் வழுக்கு மரம் உச்சிவரை சென்று அங்கு தொங்கவிடப்பட்டு இருந்த பொருட்களை இளைஞர் ஒருவர் எடுத்து அசத்தினார் .