தமிழகத்தில் சொத்துக்கள் இருந்த கோயில்கள் தற்போது பிச்சை எடுக்கும் நிலையில் தான் உள்ளன ஆலயங்களைப் பற்றி தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளன. அதை தெரிந்து கொள்ள முயலுங்கள்.கோயில் அர்ச்சகர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வருகின்றனர்.அதை புரிந்து கொண்டு ஆலையங்களுக்கு வருகிறவர்கள் அர்ச்சகர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள சாத்தனூர் திருமூலர் கோவிலில் உள்ள பக்தர்கள் மத்தியில் பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேச்சு.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள சாத்தனூரில் திருமூலர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்ற வருகை தந்த பொன்.மாணிக்கவேல் கோவிலில் உள்ள பக்தர்கள் மத்தியில் பேசுகையில், ஆலயங்களில் அர்ச்சகர்களின் ஊதியம் மாதம் 60 ரூபாய் மட்டும். அந்த சம்பளமும் மூன்று வருடமாக அர்ச்சர்களுக்கு வரவில்லை என ஒரு அர்ச்சகர் கூறும் போது, வேதனைக்கு மேல் வேதனை.அளிக்கிறது.இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு அவர் எப்படி குடும்பம் நடத்த முடியும், இந்த நிலை தொடரக்கூடாது.இதை நாம் தான் மாற்ற வேண்டும்.

ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் கோவில் உண்டியலில் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்கு செலுத்த வேண்டியது இல்லை.அங்கு பணியாற்றுகிற அர்ச்சகருக்கு பணம் அதிகமாக கொடுங்கள்.அவரது குடும்பம் உங்களை வாழ்த்தும் அவ்வாறு அர்ச்சர்களுக்கு பணம் கொடுக்க தவறினால் 20 வருடங்களில் கோவிலுக்கு அர்ச்சகரே இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என பொன் மாணிக்கவேல் தெறிவித்தார்.அதனால் அந்தக் காலத்தில் குடும்பத்தில் தனது கணவர் இறந்து விட்டார் என்பதற்காக அவர் ஞாபகமாக ஒரு ஆலயத்திற்கு 12 வேலி நிலத்தை எழுதி வைப்பது வழக்கமாகும்.

ஒரு வேலி என்பது ஆறேமுக்கால் ஏக்கர் ஆகும். 12 வேலி நிலம் இருந்த கோயிலில் இன்று எந்த வித சொத்துக்களும் இல்லாமல் தற்போது பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு கோயிலிலும் தெரியாத பல பிரச்சினைகள் உள்ளன அவைகளை அவசியம் நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என பொன் மாணிக்கவேல் பேசினார்.பொன்.மாணிக்கவேலின் இந்த பேச்சு சர்ச்சைய ஏற்படுத்தி உள்ளது.