பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இடிக்கப்பட்ட வீடுகள் , கட்டி தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

2 Min Read
  • கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகரத்தில் தற்போது ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்பட்டதால் மழைக்காலத்தில் வசிப்பதற்கு இடமில்லாமல் கோயில்கள் வீதிகளிலும் சாலைகளிலும் மரத்தடிகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலை உள்ளதாலும் மேலும் இடிக்கப்பட்ட நிலையில் உள்ள வீடுகளுக்கு இந்த நிலை தொடராமல் இருக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பத்தி ஒதுக்கீடு செய்து வீடு கட்டி தர வேண்டும்.

- Advertisement -
Ad imageAd image

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் குண்டும் குழியுமாக உள்ள சாலையிலே சீரமைத்து தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி நோய் தொற்று உருவாக்காமல் பாதுகாத்திட வேண்டும்.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதியை மேம்படுத்தி காய்ச்சல் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமித்து 24 மணி நேரமும் தடையின்றி மருத்துவ சேவை வழங்கிட வேண்டும்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/painter-dies-after-drunken-fall-on-manniaru-bridge-in-kumbakonam-police-investigation/

பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பக்தர்களுக்கும் வணிக பெருமக்களுக்கும் அரசு ஊழியர் ஊழியர்களுக்கும் இடியூறாக பல விதமான பிரச்சினைகள் ஏற்படுத்தி அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ள மதுபான கடையை அகற்றிட கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காந்தி பூங்கா முன்பு மாவட்ட செயலாளர் ம க ஸ்டாலின், தலைமையில் பெண்கள் மூட்டை முடிச்சவுடன், கும்பகோணத்தில் கொசு தொல்லையை ஒழிக்க கோரி கொசுவளையில் உட்கார்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உழவர் பேரியக்கம் மாநில தலைவர் ஆலயமணி, மாவட்ட தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜோதிராஜ், எஸ் பி குமார், வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் மதிவிமல், மகளிரணி மாநில செயலாளர் பானுமதி சத்யமூர்த்தி, இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத் சுந்தரம், மண்டல செயலாளர்கள் தங்க யோகராஜன், சினேகம் சீனிவாசன், கலையரசன், கோபி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

Share This Article
Leave a review