பண்டிகை காலங்களில் உற்சாகம் அதிகமாக இருக்கும். வரவிருக்கும் பண்டிகைகளை மிகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட குடிமக்கள் ஆர்வமாக உள்ளனர். குடிமக்கள், சந்தை சங்கங்கள், நிறுவனங்கள், சமூக மற்றும் மத அமைப்புகள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தயாராகும் அதே வேளையில், இந்தப் பண்டிகை காலத்தில் தூய்மையில் கவனம் செலுத்துவதும் முக்கியமாகும்.
தீபாவளிக்கு முன்னதாக தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0, நாட்டு நலப்பணித் திட்டம், தொழிற்கல்விக் கல்லூரி, தன்னார்வத் தொண்டு நிறுவனமான வை வேஸ்ட் வெட்நஸ்ட் டே அறக்கட்டளையுடன் இணைந்து 2 நாள் குப்பை இல்லா திருவிழா தீபத்திருவிழா, தூய்மைத் திருவிழா வாக்காளர் திருவிழா ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில், தூய்மையான, பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்டிகைகளின் தகவலை பரப்புவதற்காக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு செல்ஃபி பிரேம்கள், கழிவு ஐஸ்கிரீம் கழிவு குச்சிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு கலைப்பொருட்கள், உணவு பரிமாறுவதற்கான கரும்பு சக்கை தட்டுகள் மற்றும் கிண்ணங்கள், சுற்றுச்சூழல் அரங்குகள்-, வீட்டு உரம் தயாரித்தல் மற்றும் ஆர்.ஆர்.ஆர் (மறுபயன்பாடு, குறைத்தல், மறுசுழற்சி செய்தல்), கழிவு மேலாண்மை போன்ற நிலையான சுகாதார நடவடிக்கைகள்.
முக்கிய பிரமுகர்களுக்கு பயன்படுத்தப்படும் பூங்கொத்துகளுக்கு பதிலாக மரக்கன்றுகள், துணிப் பைகள் ஆகியவை இடம்பெற்றன. இந்த தனித்துவமான முன்முயற்சியின் கீழ், அனைத்து ஈரக் கழிவுகளும் வளாகத்திற்குள் உரமாக்கப்பட்டன.

டெல்லியின் ஷதாரா ஏக்தா கார்டனில் தூய்மை தீபாவளி என்ற கருப்பொருளில் சுவர் அழகுபடுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர்மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த நடவடிக்கையில் பங்கேற்க ஊக்குவித்தனர். குழந்தைகள் ஒன்றிணைந்து தீபாவளி கருப்பொருளில் அழகான சுவர் ஓவியங்களை வரைவதைக் காண முடிந்தது. கொண்டாட்டங்களால் பரபரப்பாக இருக்கும் டெல்லி , தூய்மையான பசுமை தீபாவளிக்கத் தயாராகி வருகிறது.