வருகிற 14-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தரவிட்டுள்ளது.

திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு வீட்டு சாப்பாடு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்தது.

அமலாக்கத்துறை , அரவிந்த் கெஜ்ரிவால்

இதை அடுத்து நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கதுறை மேற்கொண்டு காவலில் விசாரிக்க அனுமதி கோரவில்லை.இதனால் அரவிந்த கெஜ்ரிவால் வருகிற 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பாட்டில் குடிநீர், தலையணை உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

இதேபோல், கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதை அடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது.

திகார் சிறைசாலை

புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது, சட்டவிரோதப் பரிவர்த்தனை என நடைபெற்றது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து, கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாகக்த்துறை திட்டமிட்டது.

திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

இதற்காக அமலாக்கத்துறை பலமுறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த சம்மனை ஏற்று ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்து வந்தார். இந்த நிலையில், தான் கடந்த மாதம் 21-ம் தேதி கெஜ்ரிவால் வீட்டிற்கே சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இதை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்தனர். கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

அவரை காவலில் எடுக்க விரும்பவில்லை என்று அமலாகக்துறை கோரியதை அடுத்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 14-ம் தேதி வரை கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று பிற்பகல் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள திகார் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்டர். அவரை திகார் சிறையில் உள்ள அறை எண் 2-ல் போலீசார் அடைத்தனர்.

திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் முதல்வராக இருப்பதால் விதிகளின் படி அவருக்கு சில சலுகைகள் கிடைக்கும். இதுபோக மேலும் சில சலுகைகளை கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் அறை எண் 2 ஒதுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பாட்டில் குடிநீர், தலையணை, சாக்லேட் மிட்டாய்கள் உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

அதேபோல், கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் தன்னுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here