கடன் தொகை கட்ட தாமதம்- குழு ஊழியர்கள் கொடுத்த தொந்தரவின் காரணமாக மனம் உடைந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை- போலீசார் விசாரணை.

1 Min Read
  • கடன் தொகை கட்ட தாமதம்- குழு ஊழியர்கள் கொடுத்த தொந்தரவின் காரணமாக மனம் உடைந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை- போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 42.இவரது மனைவி ராணி. இவர்களுக்கு நடராஜன் மற்றும் அகிலன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் வாடகை டெம்போ லாரி ஓட்டி அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில் குழுவில் கடன் வாங்கியதாகவும் அந்த பணத்தை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டதாகவும் இதனால் குழு ஊழியர்கள் தொடர்ந்து ராஜ்குமாரை தொந்தரவு செய்ததாகவும் இதனால் மனமுடைந்த ராஜ்குமார் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review