காஞ்சிபுரம்அருகே உள்ள குருவி மலையில்உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் என்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவஇடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்திருந்தனர். பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம்அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பட்டாசு ஆலை வெடி விபத்தில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டுஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா (வயது44) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெடிவிபத்துதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோர்நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர்களுள் ஒருவரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாசுஆலையின் மற்றொரு உரிமையாளர் சுதர்சன் (31) வெடி விபத்தில் உயிரிழந்துள்ளார்.