மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு இதற்கு முன்னர் கொண்டுவந்த “பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தியது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.” என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்தியாவில் கடந்த 2016 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.இந்த அறிவிப்பு சாமானிய மக்களை திடீர் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
இந்த தகவல் சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் பெரும் பணி. செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.என்கிர அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். “எதிர்பார்த்ததைப் போல அரசாங்கம்/ஆர்பிஐ ரூபாய் 2000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது, நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ. 2000 நோட்டு என்பது பரிமாற்றத்திற்கான சரியான தொகை அல்ல. 2016 நவம்பரிலேயே நாங்கள் இதைச் சொன்னோம். ரூ. 2000 நோட்டுகள் க்ளீன் நோட் அல்ல. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.