- மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு மூதாட்டியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து நெல்லூர் ரயிலில் கொண்டு வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்ல நினைத்த தந்தை மகள். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் பார்த்ததால் மாட்டிக்கொண்ட பரிதாபம்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர். நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 45 மனைவியின் பெயர் சத்தியாவதி வயது 38. இவர்களுக்கு தேவி ஸ்ரீ வயது 17 என்ற மகள் இருக்கின்றார். சுப்பிரமணி ஆசாரி வேலை செய்பவராக கூறுகிறார். இவர் கடந்த இருபது வருடமாக நெல்லூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வசிக்கும் தெருவில் பெயர் தெரியாத மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். ஊரில் அவரை வெள்ளை முடி ஆயா என்று அழைப்பார்களாம்.
அந்த மூதாட்டி சுப்பிரமணியத்தின் பெண் தேவி ஸ்ரீ தவறான செயலுக்கு அழைத்ததாக சுப்பிரமணிய கூறுகிறார். மேலும் தேவி ஸ்ரீ கூறும் பொழுது தன்னை இந்த பெண்மணி பலமுறை வற்புறுத்துகிறார் என்றும் சம்பவம் நடந்த இன்று காலை 10 மணி அளவில் வீட்டிற்கு வந்த மூதாட்டி சுப்பிரமணியத்தின் பெண் தேவி ஸ்ரீ பிரச்சனை செய்ததாக தெரிகிறது.
இதை அடுத்து இதைப் பற்றி தந்தை சுப்பிரமணியத்திடம் தேவி ஸ்ரீ கூறியதாகவும் அதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மூதாட்டியை அடித்ததாகவும் அடித்தவுடன் மூதாட்டி படிக்கட்டில் விழுந்ததாகவும் அதன் காரணமாக தலையில் அடிபட்டு அவர் உயிர் இழந்ததாக சுப்பிரமணி போலீசார் இடம் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் இறந்த மூதாட்டியை என்ன செய்வது என்று தெரியாத சுப்பிரமணி பெரிய சூட்கேசில் அந்த பெண்ணின் உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி சூட்கேஸ் உள்ளே வைத்து அதை நெல்லூரில் இருந்து சென்னைக்கு வரும் ரயிலில் மதியம் 12 மணிக்கு ஏற்றுகிறார். உடன் அவரின் மகள் தேவி ஸ்ரீ அழைத்து வருகிறார். மேலும் அந்த ரயில் சுமார் எட்டு மணி அளவில் மீஞ்சூரை அடைந்தது
நெல்லூர் ரயிலில் இருந்து சுப்பிரமணியும் அவரின் மகள் தேவி ஸ்ரீ மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி சூட்கேஸை இறக்குகின்றனர்.
பின்பு யாரும் பார்க்காத நேரம் பார்த்து அதை பிளாட்பார்மில் விட்டு விட்டு செல்ல நினைத்தபோது ரயிலில் இருந்த சிலர் நீங்கள் கொண்டு வந்த சூட்கேஸை மறந்து விட்டு செல்கிறீர்கள் என்று கூற அதை பார்த்துக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மகேஷ் தந்தை மகள் இருவரையும் பிடித்து விசாரித்த பொழுது அவர்கள் முன்னுக்குப் பின்னாக பதிலளித்ததால்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/do-you-know-what-electronic-votes-are-do-you-know-the-us-presidential-election-system/
சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மகேஷ் இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவுடன் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தந்தை மகள் இருவரிடத்திலும் விசாரணை நடத்தி சூட்கேஸை திறக்கச் சொல்லி பெண்ணின் பிணத்தை பார்வையிட்டனர். பின்பு இந்த சம்பவம் நெல்லூர் பகுதியில் நடந்ததால் இதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு நெல்லூர் போலீசாருக்கு உள்ளது. என்று கூறி அந்தப் பெண்ணின் பிணத்தை மீண்டும் நெல்லூருக்கு அனுப்ப முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மூதாட்டி ஒருவரை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விட்டு செல்ல நினைத்தது இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.