திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கு பகல் நேர இரயில் : தென்னக இரயில்வே அறிவித்துள்ளதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தகவல்.!

2 Min Read
  • தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் வகையில், திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கு பகல் நேர இரயில் வரும் 11ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தகவல்.

தஞ்சையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடனுதவி வழங்கும் முகாம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி 5 கோடியே 38 லட்சம் மதிப்பிலான கடன் உதவிக்கான காசோலைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்…. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மக்களின் நீண்ட நாள் இரயில் சேவைகளுக்கான கோரிக்கைகள் தொடர்பாக ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் முக்கிய கோரிக்கைகள் வைத்ததாகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சர், நிர்வாக குழு தலைவர், தென்னக இரயில்வே பொது மேலாளர் உள்ளிட்டவர்களிடம் தொடர் கோரிக்கை வைத்த நிலையில், அதில் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேர இரயில் இயக்க வேண்டும் என்ற வகையில், , தற்போது திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு பகல் நேர இரயில் வரும் 11ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதாக தெரிவித்தவர், முதல் மூன்று மாதங்கள் சோதனை ஓட்டமாக நடைபெறும் என்றும், திருச்சியில் இருந்து அதிகாலை 5 .35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6. 25க்கு வந்தடையும் இரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12 .10 மணிக்கு சென்றடையும் எனவும், மறுமார்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 க்கு தஞ்சை வந்தடையும் என தெரிவித்தார்.. மக்கள் பயன்பாட்டை பொறுத்து தொடர்ந்து இயக்கபடும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியவர், மற்ற கோரிக்கைகள் குறித்து தொடர் முயற்சிமேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/navratri-festival-in-karanodai-ambal-raja-rajeshwari-blessed-the-devotees-in-his-avatar/

இன்னும் ஒரு மாத காலத்தில் தஞ்சை இராமநாதன் ரவுண்டான அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பேட்டி.. முரசொலி
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்

Share This Article
Leave a review