இங்கிலாந்து அணி வங்களாதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 364 ரன்கள் குவித்துள்ளது.
13 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் இலை சுற்றும் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தர்மசாலாவில் காலை 10:30 மணிக்கு தொடங்கிய ஏழாவது லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி மற்றும் வங்காளதேசம் அணி பல பரீட்சை. டாஸ் வென்ற பங்களாதேச அணி முதலில் வந்து பிச்சை தேர்வு செய்தது அதன்படி இங்கிலாந்த அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.
தொடக்க வீரர்களாக பேர்ஸ்ரோ, டேவிட் மலான் களம் இறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ அரை சேதம் அடித்து 52 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட், டேவிட் மலானுடன் சேர்ந்து நிலைத்து ஆடினார்.

மலான்,ரூட் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர் சிறப்பாக விளையாடிய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 140 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த ஜோ ரூட் 82 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாரும் ரன் எடுக்காததால் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி சார்பாக மெஹ்தி ஹாசன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.