மருத்துவ கழிவுகளை முறைப்படி எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவ பொருள்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை குறிப்பிட்ட நாட்களில் மருத்துவக் கழிவு மேலாண்மை மையத்தினர் எடுத்து செல்வது வழக்கம்.
ஆனால் கடலூரிலோ மருத்துவ ககழிவுகளை சாலை ஓரத்திலும் மக்கள் வசிக்கும் இடத்திலும் கொட்டப்பட்ட வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ராமாவரம் செல்லும் சாலையில் இருபுறமும் முந்திரி மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. அச்சாலை வழியாகத் தான் பெரியாங்குப்பம் , என்.புத்தூர் மற்றும் ராமாவரம் பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள சாலை ஓரமும் விளைநிலங்களுக்குள்ளும் கடந்த சில நாட்களாக சாக்கு மூட்டையில், மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளை , வாகனத்தில் ஏற்றி வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றன.
அதில் ரத்தம் உறைந்த கையுறைகள் மருந்து பாட்டில்கள் சிரஞ்சிகள் மற்றும் ரத்தம் உறைந்த பஞ்சுகள் அடைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது . எனவே இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
மேலும் தாங்கள் வசிக்கும் பகுதியில் மூட்டைகளில் அடைத்த மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.