- திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து பயிர் சேதமடைந்த புகைப்பட பதாகைகளை ஏந்தியும் திடிரென பழவேற்காடு காட்டூர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் விவசாயம் செய்ய முடியும் மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் இல்லையெனில் பொழித்துப் போய்விடும் நிலையின் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஆரணி ஆற்று படுக்கையின் அருகிலுள்ள காட்டூர் விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர்ஏக்கர் ஒன்றுக்கு ஆறு நூறு ரூபாய் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்.
அதே ஆண்டு மிக்ஸாம் புயலால் ஆரணி ஆற்றின் கரை உடைந்து இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. புயலுக்குப் பின் மத்திய குழுவுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரும் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஏக்கருக்கு 15000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவித்து இருந்த நிலையில் காட்டூர் பகுதி ஒன்றுக்கு மட்டும் பயிர் காப்பீடு நிவாரணமானது வழங்கப்பட்டது அதே பகுதியில் உள்ள காட்டூர்-2 பகுதிக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுகுறித்து பலமுறை பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் தெரிவித்துள்ளனர்.
வேளாண்மை துறையில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இத்தொகைக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனை கண்டிக்கும் வகையில் இன்று திடீரென பழவேற்காடு- காட்டூர் நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பழவேற்காட்டில் இருந்து மீஞ்சூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் பழவேற்காட்டிற்கு செல்லக்கூடிய வாகனங்களும் சுமார் மூன்று மணி நேரம் செல்ல முடியாமல் வழியில் சிக்கித் தவித்தனர். சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் சாலையில் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதமானது நடைபெற்றது அப்போது விவசாயிகள் உரிய அதிகாரி வந்தால் மட்டுமே போராட்டத்தினை கைவிடுவோம் இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்த நிலையில் பொன்னேரி வேளாண்மை துறை அதிகாரி வந்து சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக இரண்டு நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அணுகி நிவாரணம் வேளாண்மை துறையினரிடம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர் இரண்டு நாட்களில் வராத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரித்தனர்