உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது இலங்கை அணி..!

2 Min Read
இலங்கை அணி வீரர்கள்

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரியின் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் சுமாரான துவக்கமே கொடுத்தனர். காயம் காரணமாக இலங்கை வீரர் மதீஷா பதிரனாவும் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக இடம்பிடித்து நீண்ட நாள்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஏஞ்சலோ மேத்யூஸ் தனது முதல் ஓவரிலேயே மலான் விக்கெட்டை எடுத்தார். 28 ரன்களுக்கு மலான் விக்கெட்டாக, ஜோ ரூட் 5 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் கேப்டன் ஜாஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் 1 ரன், மொயீன் அலி 15 ரன்கள் என இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.

இலங்கை அணி வீரர்

பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ மட்டுமே ஓரளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களுக்கும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 33.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 3 விக்கெட், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

பின்னர் 157 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. குஷல் பெரேரா மற்றும் குஷல் மெண்டிஸ் இருவரும் விரைவாகவே தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இருவரது விக்கெட்டையும் டேவிட் வில்லியே வீழ்த்தினார். இதனால் 23 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்தது இலங்கை அணி. எனினும், சதீர சமரவிக்ரம மற்றும் நிஷங்கா இங்கிலாந்தின் அணியின் பந்துவீச்சை எளிதில் சமாளித்து இலக்கை எட்டியது.

இலங்கை அணி வீரர்

இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்ததுடன், அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இறுதியில் 25.4 ஓவர்களில் 160 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது இலங்கை அணி. நிஷங்கா 77 ரன்களும், சமரவிக்ரம 65 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேநேரம், நடப்பு சாம்பியான இங்கிலாந்து அணி சந்திக்கும் நான்காவது தோல்வி இதுவாகும்

Share This Article
Leave a review