நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெறும் விமானப்படைத் தளபதிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
பின்பு ராஜ்நாத் சிங் லேசான அறிகுறிகளுடன் அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர் குழு அவரது உடல்நிலையைப் பரிசோதித்து, ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளது.
நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 574 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் தற்போது 65,286 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.15 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.67 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 10,827 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,61,476 பேர் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,591 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 5.46% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.32%. இதுவரை மொத்தம் 92.48 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,30,419 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.