தொடரும் மனித உரிமை மீறல்.செருப்பு எடுத்துவந்த விவசாயி

2 Min Read
விவசாயி

தமிழகத்தில் இன்னமும் அடிமை முறை ஒழியவில்லை ஒரு சாரார் மற்றொரு சாராரை அடிமை படுத்தியே வருகின்றனர் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு தஞ்சையில் நடை பெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வெங்கடேசன்.அதிகாரிகள் இந்த ஊராட்சியில் ஆய்வுக்கு வந்திருந்தனர்,அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் ஒரு இடத்தில் தனது செருப்பை விட்டுவிட ஒரு விவசாயியை அழைத்து அந்த செருப்பை எடுத்து வர உத்தரவிட செருப்பை விவசாயி ஒருவர் கையில் எடுத்து வந்து அவரது காலடியில் வைத்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் முன்னிலையில் இது நடந்தது.

- Advertisement -
Ad imageAd image
கையில் செருப்புடன்

தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சியில் நடந்து வரும் அரசின் திட்டப்பணிகளான ஆர்.ஒ. வாட்டர் பிளான்ட், பொதுமக்கள் நூலகம், மகளிர் சுய உதவிகள் உற்பத்தி செய்து வரும் ரெக்ஸின் பைகள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்படி ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது சில இடங்களில் செருப்பை அவிழ்த்து விட வேண்டியுள்ளது.அப்படி ஏதோ ஒரு இடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செருப்பை அவிழ்த்துவிட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன். அங்கு நின்று இருந்த விவசாயி பாரதி என்பவரிடம் நூலகத்தில் செருப்பு இருக்கு எடுத்துவா என்றார்.

விவசாயி

விவசாயி பாரதி நூலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவரின் செருப்பை கைகளால் எடுத்து வந்து ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் காலடியில் வைத்தார்.அப்போது மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆகியோர் அங்கு இருந்தனர்.ஆடியர்,அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஊராட்சி மன்ற தலைவர் செருப்பை கையால் எடுத்துவர சொன்னாரா இல்லை விவசாயியே கையால் எடுத்து வந்தாரா என தெரிய வில்லை.

வயதான விவசாயியை செருப்பு எடுத்துவர ஊராட்சி மன்ற தலைவர் சொல்லியிருக்க கூடாது.வயதான அந்த விவசாயி செருப்பை எடுத்து வரும் போதே அதை தடுத்திருக்க வேண்டும் அது போன்ர எந்த செயலும் நடக்காததால் இந்த சம்பவம் இப்போது மனித உரிமை பிரச்சனையாகி உள்ளது.

Share This Article
Leave a review