மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள். இரண்டு மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்டுள்ளோம் திமுக கூட்டணியில் துரை வைகோ விழுப்புரத்தில் பேட்டியளித்தார்.
விழுப்புரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மதிமுக சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ பேசியது. பாஜக கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக ஆட்சி அமைத்ததற்கு பிறகு இதுவரை ஒன்றரை லட்சம் விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது போல போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசுவதை நீதிமன்றமே கண்டித்து இருக்கிறது. வரும் தேர்தலில் நாடு முழுவதும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டை கர்நாடகா தொடர்ந்து வஞ்சிக்கிறது கர்நாடகாவில் அணைக்கட்டு முயற்சி நடைபெறுகிறது. சமீப காலம் வரை பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டு அவர்கள் கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்தது. இப்போது திடீரென பாஜகவை எதிர்ப்பது தேர்தல் ஸ்டண்ட் என மக்கள் சந்தேகிக்கின்றனர். பா ஜ க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் ஒரு தொகுதியில் யாவது ஜெயித்து காட்டட்டும். தேர்தல் பத்திரங்கள் முடக்கப்பட்டு இருப்பது வரவேற்க தகுந்தது. இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களில் தேர்தல் நிதி பெற்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசுக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். என்று பேசினார்.
விழுப்புரத்தில் மதிமுக தேர்தல் நிதி பெரும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ.
2014 மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை ஒன்றரை லட்சம் விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள். பெட்ரோல் டீசல் கேஸ் விலை குறையவே இல்லை. தேர்தல் பத்திர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து வழங்கிய தீர்ப்பு வரவேற்க தகுந்தது.மார்ச் 13ஆம் தேதிக்குள் அவற்றை ரத்து செய்து பட்டியலை வெளியிட அறிவுறுத்தியுள்ளது.தேர்தல் பத்திர சட்டத்தினால் பயனடைந்தவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளே அவர்கள் கொடுத்த நன்கொடையால் அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எல்லோரும் அறிவார்கள். எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது .வருகின்ற தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் இரண்டு மக்களவை ஒரு மாநிலங்களவை திமுக கூட்டணியில் கேட்டுள்ளோம் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக வெல்லுவது உறுதி என்று பேட்டி அளித்தார்.