தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே முதல் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நிறைவு.

1 Min Read
  • தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே முதல் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று காணொளி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.. டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ஆயிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது..

தமிழகத்தில் படித்த இளைஞர்கள், பெண்கள் ஐடி வேலைகளை பெற உதவும் வகையிலும் மாநிலம் சமூகப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்காகவும் தஞ்சாவூர், சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மினி டைட்டல் பார்க் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே தஞ்சையின் முதல் ஐடி பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது இதன் முதற்கட்டமாக சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் மு.கஸ்டாலின் கதாணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் 3.40 ஏக்கரில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 3 அடுக்கு மாடிகளுடன், ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது..
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், நாகை மாவட்ட இளைஞர்கள் பலர் சென்னை பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் ஐடி வேலைகளை செய்து வருகின்றனர். தஞ்சையில் டைட்டில் பூங்கா வருவதால் ஒரு மணியிலிருந்து அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் பயணத்தில் இளைஞர்கள் சொந்த ஊரிலிருந்து வேலை பார்க்கும் நிலை ஏற்ப்பட உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தஞ்சை டைட்டல் பூங்காவில் வர உள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவும், தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்குவதற்காகவும் இந்த டைடல் பூங்காவை முதல்வா் அமைத்துள்ளாா்.
இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களூக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review