டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கேவை, அவரது இல்லத்தில் பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்துகட்சிகளும் எதிர்வடும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மிகவும் எதிர்பார்த்து வருகின்றன.கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப்பொருப்பில் இல்லாத காங்கிரஸ் வெவ்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்துவருகிறது.இந்த நிலையில் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு மிகப்பெரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன ஏற்கனவே பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கேவை, அவரது இல்லத்தில் பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக முடிந்தவரை பெரும்பாலான அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க உள்ளதாக தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வரும் தேர்தல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே கூறினார்
பின்னர் பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு இது வரலாற்றுப்பூர்வமான நடவடிக்கையாக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கி, நாட்டுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.நாடாளுமன்றதேர்தலை பல கட்சிகளை கொண்டு எதிர்கொள்ளப்போகிறது காங்கிரஸ.்