- ஆரணி ஆற்றின் வெள்ளநீர் புகாதவாறு – ஆண்டார்மடம் கிராமத்தில் தரம்இல்லாமல் கட்டப்படும் கான்கிரீட் சுவர் – நீர்வளத்துறை அதிகாரிகள் பதில் கூற மறுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வெள்ளநீர் கரைகளை உடைத்து கொண்டு கிராமத்திற்குள் புகுந்த நிலையில் – மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகாதவாறு கரைகளை ஓட்டி காங்கிரீட் சுவர் அமைக்கும் பணி தமிழக அரசின் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு பணி ஆனது நடைபெற்று வருகிறது.
சுமார் 240 மீட்டர் தூரத்திற்கு இப்பணியானது நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணி தரம் இல்லாமல் இரவு நேரங்களில் அதிகாரிகள் இல்லாமல் உரிய முறையில் ஜல்லி,மணல், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை கலக்காமல்,தரம் இல்லாமல் கான்கிரீட் பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது,மேலும் பொக்லைன் கொக்கியில் காங்கிரட் களவுகளை ஊற்றி எடுத்து ஊத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆரணியாறுபொறியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது,இது குறித்து உதவி பொறியாளரிடம் கேட்டு விளக்கம் அளிப்பதாக செல்போன் தொடர்பை கட் செய்துவிட்டார்,மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.