தமிழகம் விவசாயத்தை நம்பியிருக்கும் ஒரு மாநிலம் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் தண்ணீரின்றி பயிர்கள் வாடிவருவதை நாம் அன்றாடம் அறிவோம்.கர்நாடகா நீதி மன்ற திர்ப்புகளுக்கு கொஞ்சம் கூட செவிசாய்க்காமல் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்புள்ளாகிறார்கள்.
தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுருத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்திவிட்டார்கள்.தமிழக அரசும் சட்ட மன்றத்தில் பல தீர்மானங்களை நிறைவேற்றி விட்டது ஆனாலும் கர்நாடக அரசு கண்டு கொள்ளவே இல்லை.மத்திய அரசு கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விட அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனவே தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், உடனடியாக மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் அமைப்புகளிடம் போராட்டத்தை தூண்டிவிடும் பாஜகவை கண்டித்தும், காவேரி விவகாரத்தில் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும் மத்திய அரசு கண்டித்தும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் – பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து உள்ளன. இந்த பந்திற்கு ஆதரவாக வணிகர்கள் மற்றும் காய்கறிக்கு சந்தைகள் – மார்க்கெட்டுகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

தொடர்ந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வில்லை என்றால் விவசாயிகள்,மற்றும் சமூக ஆர்வலர்கள்,வணிகர்கள் கூட்டியக்கமாக இணைந்து போராட்டத்தை தீவிரப் படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் வணிகர்கள்.மத்திய அரசு இனியும் மவுனம் காக்காமல் கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விட வலியுருத்த வேண்டும்.
காவிரி நீர் தமிழகத்திற்கு மிக அவசியம் என்பதை மத்திய பாஜக அரசும் உணரும்.அந்த அடிப்படையில் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் எனவே தான் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.