திருவள்ளூர் அருகே அருங்குளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்.
திருவள்ளூர் மாவட்டம், கனக்கம்மாச்சத்திரம் அடுத்த அருங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சரண்யா இவரது கணவர் முரளி. அ.தி.மு.க முக்கிய பிரமுகர் இந்த பகுதியில் உள்ளார், இதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பில் உள்ளவர், ரகு என்கின்ற ரகுவரன் இந்த கிராம நிர்வாக அலுவலர் இவரை அ.தி.மு.க பிரமுகர் முரளி கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
மேலும் இவரது கிராம நிர்வாக அலுவலர் பணியை செய்ய விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மே 1 கிராம சபை கூட்டத்தில் கூட்டம் நடத்துவது பஞ்சாயத்து தலைவர் சரண்யா செய்யாமல்.

அவரது கணவர் அ.தி.மு.க பிரமுகர் முரளி தலையீடு செய்துள்ளார். இதனை கிராம நிர்வாக அலுவலர் இப்படி செய்யக்கூடாது என்று தட்டிக் கேட்டுள்ளார். மேலும் இது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளார் .
அவர் கூறுவதை ஏற்காமல் தலைவர் சரண்யாவின் முன்னிலையில் அவரது கணவர் முரளி அனைவரயும் மிரட்டும் தோரணையில் நடந்துளார் . இதனால் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கும் அ.தி.மு.க பிரமுகர் முரளிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அ.தி.மு.க பிரமுகர் முரளி அரசுப்பணி கிராம நிர்வாக அலுவலர் பணி செய்யவிடாமல் தடுக்கிறார், என்னை மிரட்டுகிறார் , தகாத வார்த்தையில் திட்டுகிறார், போன்ற காரணங்களை குறிப்பிட்டு புகாராக கனக்கம்மாச்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
அ.தி.மு.க பிரமுகர் கிராம நிர்வாக அலுவலர் மிரட்டியதாக காவல் நிலையம் வரை சென்றுள்ள புகாரால்அருங்குளம் ஊராட்சியில் பெரும் பரபரப்பு .