டெல்லி காவல்துறையில் காவலர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு – அறிவிப்பு வெளியீடு

0
63
காவலர்

டெல்லி காவல்துறையில் காவலர் (நிர்வாகம்) ஆடவர் மற்றும் மகளிர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு-2023-க்கான அறிவிக்கையை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 01.09.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய நாட்டின் அனைத்துப்பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தகுதி உடையவர்கள் ஆவர்.

பணியிடம், வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம், எவ்வாறு விண்ணப்பம் செய்வது போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ssc.nic.in என்ற ஆணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், பணம் செலுத்தவும்  கடைசி நாள் 30.09.2023 (23.00 மணிவரை) ஆகும்.

2023 நவம்பரில் தென்மண்டலத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 07, தெலங்கானாவில் 03, புதுச்சேரியில் 01 என 21  மையங்கள்/ நகரங்களில் கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here