அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் சாராய வியாபாரிக்கும் தொடர்பு-அண்ணாமலை

2 Min Read
அண்ணாமலை

கள்ளச்சாராயம்

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் கள்ளத்தனமாக பெற்ற நபரிடம் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து உள்ளார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று வாந்தி ,மயக்கம்,கண்ணெரிச்சல், தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர்களை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஆட்டோ மூலமாகவும் உறவினர்கள் அழைத்து வந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைக்கு சுமார் 35க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் 120க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த நபர்களில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல்வர்- அண்ணாமலை

மேலும் அவர்களை பார்ப்பதற்கு தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் வந்து கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் உள்ள இறந்தவர்களின் உடலுக்கு வீடு வீடாக சென்று மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்.

பாஜக 1 லட்சம்

பாரதிய ஜனதா கட்சி இறந்தவர்கள் குடும்பத்துக்கு 15 நாள் கழித்து ஏ.ஜி சம்பத் தலைமையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று மத்திய அரசின் திட்டத்தை கொண்டு வருவதற்கு ஒரு ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பார். அதைப் பார்த்த 29 குடும்பத்தில் நான்கு ஐந்து குடும்பங்கள் மோடி வீடு வேண்டும், முத்ரா திட்டம் வேண்டும் என்றார்கள். அதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசின் திட்டத்தை கொண்டு வருவதற்கு ஏ.ஜி சம்பத் தலைமையில் குழு அமைத்து ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து பொருளாதார சூழ்நிலையை ஆய்வு செய்து நமது கட்சிக்கு ஒரு பரிந்துரை கொடுப்பார்கள். அதை வைத்து நாம் கொடுக்கக்கூடிய ரூபாய் ஒரு லட்சம் காசோலை நிரந்தரமாக அவர்களின் வறுமையில் இருந்து மேலே கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா கட்சி உதவி செய்யும் என்றார்.

செஞ்சி மஸ்தான்

கள்ளச்சாராயம் திமுக அடிமட்ட தொண்டனையும் பின்னி பிணைத்து இருக்கிறார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு காவல்துறை சோதனை செய்தார்கள். திமுக கட்சிக்காரரின் வீட்டில் ஸ்டிக்கர் ஒரு வீட்டில் இருக்கிறது. அந்த வீட்டில் கள்ளச்சாராயம் பாக்கெட் இருக்கிறது. அது ஒரு கிராமப் பகுதி அல்லது மலைப்பகுதியோ இல்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரம் இருக்கக்கூடிய மையப்புள்ளி இது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 150 மீட்டர் மாவட்ட கோர்ட் இருந்து 200 மீட்டர் இவ்வளவு தூரத்தில் இருக்கக்கூடிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து இருக்கிறது. உள்ளே சென்று மருத்துவரிடம் பேசினோம். கடந்த முறை செங்கல்பட்டு,மரக்காணத்தில் 22 பேர் அப்பாவி நமது சொந்தங்கள் இழந்த போது அப்போதே நாம் சொன்னோம். அதில் முதல் குற்றவாளிக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி சார்பாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறோம் என்றும் கூறினார்.

Share This Article
Leave a review