வருகிறது 19 ஆண்டு சனி தசை.! தப்பிக்க பரிகாரம் என்ன.?

0
43
சனி பகவான்

ஏழரை சனி என்ன பாடு படுத்தும் என்று எல்லோருக்கும் தெரியும். சனிமகா தசை காலத்தில் மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் துன்பத்தில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். மனிதர்களுக்கு ஏதாவது ஓரு கால கட்டத்தில் சனி தசையோ, சனி புத்தியோ நடக்கும். சனி திசை 19 வருடங்களாகும். அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி.


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகா திசை நடக்கும். சனிபகவான் நீதிமான், தர்மவான் நல்லவர்களுக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டார். ஏழரை சனி காலத்திலும் நன்மையே செய்வார். அதே நேரத்தில் சில சோதனைகளை மட்டுமே கொடுப்பார்கள். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ தீய பலன்களோ உண்டாகும். சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். ஜாதகத்தில் சனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். சனிபகவான் ஆயுள்காரகன் அவரை வழிபட நீண்ட ஆயுள் கிடைக்கும்

.

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி திசை யோகத்தை வழங்கும். மேஷம், சிம்மம், கடகம் லக்னகாரர்கள் சனிதசை, சனிபுத்தி காலங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

சனிக்கிழமைகளில் கோவில்களுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் நீங்கும். பிறந்த ஜாதகத்தில் சனிபகவான் நன்றாக இருந்தால் அவரின் ஆயுள் நன்றாக இருக்கும் தொழில் நன்றாக இருக்கும். தீர்க்க ஆயுள் நல்ல நண்பர்கள், நிறைய உறவினர்கள் இருப்பார்கள். நன்றாக பழகுவார்கள். அனைவரும் சமமே என்று பழகுவார்கள். உழைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சனி ஒரு ஜாதகத்தில் பாதிப்பாக இருந்தால் மந்தமாக சோம்பேறியாக இருப்பார்.


சனி கால் பகுதி. பூர்வீக கர்மா, தொழில் பலத்தை குறிக்கும். ஆயுளை குறிக்கும். ஒருவருக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று சனிதிசையில் புரியவைப்பார் சனிபகவான்.
வாழ்க்கையில் ஞானத்தை உணரவைப்பார் சனிபகவான். நல்லது எது கெட்டது எது என்று புரிய வைப்பார். உளவியல் ரீதியாக ஞானத்தையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைத் தருவார் சனிபகவான். காதல் விசயங்களில் பலருக்கு தோல்வியை தருவார் எனவே சனி திசை நடக்கும் போது வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

வக்ரமடையும் சனியால் சச மகா யோகம் யாருக்கு?..விபரீத ராஜயோகம் யாருக்கு சனியால் சங்கடமில்லை: மேஷ ராசியில் நீசமடையும் சனி மேஷத்திற்கு பாதகாதியாகவும் செயல்படுவார் என்றாலும், அவர் கோச்சாரத்தில் 11வது இடத்தில் இருந்தால் நன்மைகளையே செய்வார். மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய லக்னகாரர்களுக்கு சனிபகவான் அதிகம் நன்மை செய்ய மாட்டார். அதே நேரத்தில் சனி 3, 10, 11, ஆகிய இடங்களில் நின்றிருந்தால் சனி நல்லது செய்வார். ரிஷபம் சனிக்கு நட்பு வீடு காரணம் லக்னாதிபதி சுக்கிரன் நண்பர்.

சனி ரிஷபத்திற்கு பாக்யாதிபதி, தொழில் ஸ்தான அதிபதி சனி நட்பின் அடிப்படையில் நன்மைகளையே செய்வார். துலாம் லக்னகாரர்களுக்கு சனி சுபமானயோகங்களை செய்வார்.
காரணம் அங்குதான் உச்சமடைகிறார். மிதுனம் அஷ்டமாதிபதி, பாக்ய ஸ்தான அதிபதி. சனிபகவான் ஆயுள் பலத்தை கொடுப்பதோடு நல்ல கன்னி லக்னகாரர்களுக்கு சனிபகவான் ஆறு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. நன்மையும் தீமையும் கலந்தே வரும். சூரியன், சந்திரன் பகை: சந்திரனும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சனிதசையில் சுமாரான பலன்களே இருக்கும்.

கடக லக்னகாரர்களுக்கு 11ஆம் வீட்டிற்கு வரும் போது நன்மை செய்வார். அவர் யோகாதிபதியில்லை என்பதால் தடை தாமதங்களுடன் எதையும் செய்வார். சிம்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணியாதிபதி, ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி என்பதால் சனி தசை காலத்தில் நோய் தொந்தரவுகள் வரும். கடன்கள் அதிகம் அதிகம் ஏற்படும். எனவே கடகம், சிம்மம் லக்னகாரர்கள் சனிதிசை சனி புத்தி காலத்தில் கவனமாகே இருப்பது அவசியம். நன்மை செய்யும் சனிபகவான்: தனுசு லக்னகாரர்களுக்கு சனி நட்பானவர் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.


அதே போல மீன லக்னகாரர்களுக்கு சனி லாப ஸ்தான அதிபதி 12ஆம் வீட்டிற்கு சனி அதிபதி என்பதால் நிறைய நிம்மதியையும், இடமாற்றங்களையும் தருவார். பணத்தையும் தருவார். சனி தசை நடக்கும் போது தொழில் தொடங்க வைப்பார். ஒருவரின் ஜாதகத்தில் சனி 3, 6,10,11ஆம் இடங்களில் இருப்பது அதிர்ஷ்டம். நல்ல பலன்களைக் கொடுப்பார். சனிபகவான் உச்சம் பெற்றிருந்தால் அதன் மீது குரு பார்வை விழுவது நன்மையை தரும். சனிதசை நடக்கும் போது உழைப்பு கூடும். சோதனைகள் அதிகரிக்கும். தர்மநெறியோடு நடந்து கொள்ள வைப்பார்.

சனி நீதிக்கு அதிபதி. நீங்கள் செய்த நன்மை தீமையின் அடிப்படையில் உங்களுக்கு நன்மைகளும் தீமைகளும் நடக்கும். சனிபகவான் ஜாதகத்தில் யோகம் பெற்ற நட்சத்திரங்களில் இருந்தாலோ, நல்ல நிலையில் இருந்தாலோ நன்மைகள் நடைபெறும். சனி திசை நடக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் ராசியில்,லக்கினத்தில் சனி இருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படுவர். வேலையில் வேறு ஊருக்கு இடமாற்றம் உண்டாகும் வாய்ப்புண்டு. இரண்டாவது இடத்தில் சனி இருந்தால் பொருள் நஷ்டம் உண்டாகும் கண் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
பிறந்த ஜாதகத்தில் மூன்றாவது இடத்தில் சனி இருந்தால் நல்ல பலன்களே நடைபெறும். எதிர்பாராத இடத்தில் இருந்து பொருள் வரவு உண்டாகும்.


நான்காம் இடத்தில் சனி இருந்தால் எப்போதும் கலகமும் அதனால் மனக்குழப்பமும் ஏற்படும். ஐந்தாவது இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த இடத்தில் சனி இருந்தால் பெற்ற பிள்ளைகளால்தான் அதிக தொந்தரவுகள் வரும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வரலாம். ஆறாவது இடத்தில் சனி இருந்தால் அறுவை சிகிச்சை நடக்கலாம், அதே நேரத்தில் எதிரிகள் தொல்லை நீங்கும்.

பிறந்த ஜாதகத்தில் எட்டாவது இடத்தில் சனி இருந்தால் உறவினர்களுக்கு கஷ்டம் வரும். ஒன்பதாவது இடத்தில் சனி இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். பத்தாம் இடத்தில் சனி இருந்தால் மிக நல்லது.நல்ல வேலை,திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். 11 ல் சனி இருந்து சனி திசை நடந்தால் சொத்து பெருகும்.நோய் நொடியில்லாத சுகமான வாழ்க்கை அமையும்.

12 ல் சனி இருந்தால் வீண் அலைச்சல் வீண் விரையம் ஏற்படும். சனிதிசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் சனிபகவானுக்கு ஏற்ற யாகங்களை செய்யலாம்.
ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று வர பாதிப்புகள் நீங்கும். சனி திசையில் பாதிப்புகள் குறைய நிறைய மரம் நட வேண்டும். அதேபோல மரங்களுக்கு தண்ணீர் விட்டு பராமரிக்கலாம்.
ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். தர்மநிலையில் இருப்பவர்களுக்கு சனி அதிக நன்மைகளை செய்வார். எனவே சனி தசை வந்து விட்டதே என்று அச்சப்பட வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here