மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

1 Min Read
இறந்த மயில்கள்

மயில்,  1963 இல் இந்தியாவின் தேசிய பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

மயில் குடும்பத்தில் உள்ள  பறவையின் மிக சக்திவாய்ந்த குரல்களைக் கொண்ட மிக அழகான பறவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவை வரவிருக்கும் பருவமழையின் அடையாளம். மயில் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தின் சின்னமாக உள்ளது, அது நமது தேசத்தின் பெருமையாகும். இது உலகம் முழுவதும் அதன் அழகால் குறிப்பிடப்படுகிறது.

மயில்களை பாதிக்கும் முக்கிய அச்சுறுத்தல்கள் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அவற்றின் இறகுகளுக்கான தேவை. அவை சில சமயங்களில் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன. இது ஒரு புறம் இருக்க மனித இனத்தால்  அழிந்து வரும் மயில்களை பற்றிய செய்தி தொகுப்பை காண்போம்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காகவும்,தண்ணீர்க்காகவும் கூட்டம் கூட்டமாக விளை நிலங்கள் மற்றும்  மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை புரிவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கோவையின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஏராளமான அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்களும் உள்ளது. இங்கு ஏராளமாக மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சிக்கி இரண்டு மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதை கண்ட பொதுமக்கள்    வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் தெரிந்து   வந்த வனத்துறையினர் உயிரிழந்த இரண்டு மயில்களையும் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Share This Article
Leave a review