கோவை நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் தீயை அணைக்க சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்துள்ளது.

1 Min Read
மலைப்பகுதியில் தீ

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தீ எரிந்து கொண்டிருக்கிறது. இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து தீ அணைக்க முடியாமல் கோவை வனத்துறையினர் திணறி வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இன்று சூலூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீயை அமைப்பதற்காக நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளனர். 6:45 மணி அளவில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பதற்காக வந்துள்ளது இதைத் தொடர்ந்து தண்ணீர் எடுத்து வருவதற்காக  கேரளா மாநிலம் மலம்புழா அணையில் இருந்து நீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளது. தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review